செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (14:53 IST)

ரசிகரைத் தாக்கி செல்போனை தூக்கி எறிந்த பிரபல பாடகர்! வலுக்கும் கண்டனங்கள்..!

பிரபல பாடகர் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது செல்போனில்  வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கி தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. 
 
பிரபல பாடகர் ஆதித்ய நாராயணன் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்லூரி ஒன்றில்  நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் செல்போனில் அவரை வீடியோ எடுத்தார். 
 
இதனால் ஆத்திரமடைந்த ஆதித்ய நாராயணன் அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி கூட்டத்தில் தூக்கி வீசினார். இதனால் அந்த ரசிகர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஆதித்ய நாராயணனுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது 
 
இதுவே எங்கள் கல்லூரியாக இருந்திருந்தால் ஆதித்ய நாராயணன் அடி வாங்கித்தான் சென்றிருப்பார் என்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva