சிந்துபாத் ரிலிஸைப் பாதித்த பாகுபலி – பின்னணி என்ன ?
விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியாவததாக இருந்த சிந்துபாத் திடிரென ரிலிஸ் ஆகாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆறு படங்களாவது ரிலீஸாகி வரும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை அவர் நடித்த 'பேட்ட' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'சிந்துபாத்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் என்ன காரணத்தாலோ ரிலிஸ் ஆகாமல் ஒதுங்கிக் கொண்டது.
இதுபற்றி விசாரித்ததில் சிந்துபாத் படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ள கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பாகுபலி முதல், இரண்டாம் பாகங்களை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். அப்போது பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்நிறுவனம் சார்பில் ராஜராஜன் ரூ. 17.60 கோடி பாக்கி வைத்துள்ளதால் படத்தை ரிலிஸ் செய்ய ஹைதராபாத் கோர்ட்டில் தடை வாங்கியுள்ளனர்.
இந்தப் பிரச்சனையால் நேற்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த சிந்துபாத் நேற்றுக் காலை வரை தியேட்டர் உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் கண்டட் புரொவைடர்ஸ் எனப்படும் டி.சி.பி (DCP)யிடமிருந்து வில்லங்கச் சான்றிதழ் கிடைக்காததால் படத்தை திரையிடவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.