ஆட்டோகாரராக மாறிய சிம்பு...வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் ஒரு புதிய படத்தில் ஆட்டோகாரராக வலம் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் சிம்பு, கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற முன்னனி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ள சிம்பு, ஆட்டோ ஓட்டுநராக உடை அணிந்து அவர் வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.