புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (10:28 IST)

ஓ மை கடவுளே படத்தின் இயக்குனரோடு இணையும் சிம்பு!

அசோக் செல்வன், ரித்விகா மற்றும் வாணி போஜன் ஆகியவர்கள் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்  பின்னர் ஒடிடி தளத்தில் வெளியான போதும் மிகப்பரவலான கவனத்தைப் பெற்றது.  இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டினர். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியால் தெலுங்கில் தானே அந்த படத்தை ரீமேக் செய்துள்ளார் அஷ்வத் மாரிமுத்து.

இந்நிலையில் சிம்பு தனது அடுத்த படத்தில் இயக்குனராக அஷ்வத் மாரிமுத்துவை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களை முடித்துவிட்டு அஷ்வத் படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.