புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:42 IST)

ஒரு கதை சொன்னார்.. கே.வி.ஆனந்த் படத்துல நடிக்கலாம்னு இருந்தேன்! – சிம்பு வேதனை

இயக்குனர் கே.வி.ஆனந்த் உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள நடிகர் சிம்பு அவருடனான அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இயக்குனராக பல வெற்றி படங்களை எடுத்து புகழ் பெற்றவர் கே.வி.ஆனந்த். தற்போது மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கே.வி.ஆனந்த் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிம்பு “அதிர்ந்து பேசாத மனிதர் கே.வி.ஆனந்த். அவரது கோ படத்தில் நான் நடிக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் எனக்கு மிக அருமையான கதை ஒன்றை சொல்லியிருந்தார். அவருடன் இணைந்து படம் செய்யலாம் என்று ஆவலாக இருந்தேன்” என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.