1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:12 IST)

தமிழ் நடிகர் செல்லதுரை உடல்நல குறைவால் மரணம்! – அடுத்தடுத்த அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் உயிரிழந்த நிலையில் தற்போது தமிழ் குணசித்திர நடிகர் செல்லதுரையும் மரணித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் கத்தி, தெறி, ராஜா ராணி, மாரி உள்ளிட்ட படங்களில் குணசித்திர நடிகராக நடித்தவர் செல்லதுரை. சின்ன சின்ன கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அதை தனக்கே உரிய பாணியில் நடித்து மக்களிடம் பிரபலமாகவும் இருந்து வந்தார்.

சமீபத்தில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்லதுரை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இயக்குனர் கே.வி.ஆனந்த மறைந்தது திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது செல்லதுரையின் மறைவு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.