திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:41 IST)

இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே நண்பா! – கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் கலக்கம்!

தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரை பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட இயக்குனராகவும், சிறந்த ஒளிப்பதிவாளராகவும் அறியப்படுபவர் கே.வி.ஆனந்த. பத்திரிக்கை புகைப்படக்காரராக தனது வாழ்வை தொடங்கியவர் ஒளிப்பதிவாளராக பரிணமித்து இயக்குனராக பல படங்களை இயக்கி சினிமாவில் தனக்கென தடம் பதித்தவர்.

கடந்த சில நாட்கள் முன்னதாக கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”நண்பர் கே.வி.ஆனந்தின் மரண செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது” என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்தின் அயன், மாற்றான், காப்பான், கோ என பல படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக பணியாற்றியவர் ஹாரிஸ் ஜெயராஜ். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் பிரசன்னா, விக்ரம் பிரபு உள்ளிட்ட மேலும் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.