சிம்புவின் ’’வெந்து தணிந்தது காடு’’ பட முக்கிய அப்டேட் !
நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகிறது.
கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றது.
இப்படத்தின் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வெந்து தணித்ததுகாடு படத்தின் 2வது போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இதனால் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.