சிம்பு உண்மையிலேயே லூஸா? இல்ல, லூஸ் மாதிரி நடிக்கிறாரா?
சிம்புவின் அடுத்தடுத்த அட்ராசிட்டிகளால், அவர் உண்மையிலேயே பைத்தியமாகி விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், பயங்கர பிளாப். எனவே, சிம்புவின் கெரியரே காலியாகிவிடும் என்ற அளவுக்கு சிலர் நினைத்தனர். ஆனால், அவரின் அடுத்த படம் குறித்த ஏகப்பட்ட தகவல்களும் வந்துகொண்டுதான் இருந்தன.
இதனால் கடுப்பான சிம்பு, ‘என் படத்தைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் எழுதுவதை நிறுத்துங்கள்’ என்று ட்விட்டரில் கொதித்தெழுந்தார். பின்னர், ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். செப்டம்பரில் அடுத்த படம் ரிலீஸ். இடைவேளை, பாடல்கள் கிடையாது’ என ட்வீட் செய்தார்.
தற்போது, ‘இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஷூட்டிங் போவதற்கு முன்பே பின்னணி இசை அமைத்துவிட்டு, அதன்பிறகு ஷூட்டிங் போகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்’ என ட்விட்டரில் கூறியுள்ளார்.
சிம்புவின் கூற்றுப்படி பார்த்தாலும், இப்போதுதான் இசையமைக்கத் தொடங்கியிருப்பார் யுவன் சங்கர் ராஜா. அவர் இனிமேல் இசையமைத்து, அதன்பிறகு ஷூட்டிங் நடத்தி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து, சென்சார் ஆகி எப்படி அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், சிம்பு உண்மையிலேயே லூஸா, இல்லை