1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (11:27 IST)

சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

pathu thala
சிம்பு நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ‘பத்து தல’  படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 30 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சில்லுனு ஒரு காற்று என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா என்ற படத்தை இயக்கி உள்ளார்.

 
Edited by Mahendran