ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (14:19 IST)

பிக்பாஸ் வீட்டிற்கே சென்ற சிம்பு: போட்டியாளர்களுக்கு ஊக்கம்!

biggbossultimte simbu
பிக்பாஸ் வீட்டிற்கே சென்ற சிம்பு: போட்டியாளர்களுக்கு ஊக்கம்!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று நடைபெற உள்ள நிலையில் இன்று சிம்பு, பிக் பாஸ் வீட்டிற்கே சென்று போட்டியாளர்களுக்கு  ஊக்கப்படுத்தினார் 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதும் முதலில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வந்ததை அடுத்து அவர் திடீரென விலகியதால் சிம்பு தொகுத்து வழங் வருகிறார் என்பது தெரிந்ததே
 
 இந்த நிலையில் இன்று மாலை இந்த நிகழ்ச்சியின் கிரான்ட் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில் தற்போது இறுதிப்போட்டியில் இருக்கும் நான்கு போட்டியாளர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது தெரிந்துவிடும்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் சிம்பும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்று நான்கு போட்டியாளர்களையும் ஊக்கப்படுத்தினார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது