அநியாயத்துக்கு ஒல்லி ஆகிட்டீங்களே... ஸ்லிம் பிட் அழகில் ஜிவ்வுனு இழுக்கும் லாஸ்லியா!
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர். இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.
பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது தனது ஸ்லிம் பிட் அழகை காட்டி போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.