தனது முகத்தை மூடிச் சென்ற சிம்பு...என்ன காரணம்...?
தனது கெட்டப் மீடியாக்களுக்குத் தெரியக் கூடாது என்று சிம்பு முகத்தை மூடிச் சென்றார்.
நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.நடிகர் சிம்பு இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்
இந்நிலையில், திருப்பதி கோவியில் சாமி தரிசனத்திற்காக வந்த சிம்பு சுசீந்தரன் படத்தில் தான் நடித்து வரும் கெட்டப் யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக தன் முகத்தை மூடி வேகமாகக் காரில் சென்றார்.