1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (19:28 IST)

சிம்பு-சுசீந்திரன் படத்திற்கு இசையமைக்கும் தமிழ் நடிகர்!

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரம் நடைபெறும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் அதற்கு முன்பாக அவர் சுசீந்திரன் இயக்கும் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் சிம்பு நாளை முதல் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு நடிகர் ஜெய் இசை அமைக்க இருப்பதாகவும், இவர் ஏற்கனவே தான் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தேனிசைத் தென்றல் தேவாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஜெய்யின் ரத்தத்திலேயே இசை கலந்து உள்ளது என்றும் அவர் சிம்பு படத்திற்கு அசத்தலாக இசையமைப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்