எனக்கும் தனுஷுக்கும் போட்டி இருந்தது: ஒப்புக்கொண்ட சிம்பு!
நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கும் மத்தியில் போட்டி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இருவரும் மறைமுகமாக மோதிக்கொண்டனர். இது அவர்கள் படங்களில் தெளிவாக தெரியும்.
சமீபத்தில் கூட தனுஷ் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், அது ரஜினி மட்டும்தான் கூறிய போது, சிம்பு நான் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முயற்சி செய்யவில்லை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டதால், அடுத்த சூப்பர் ஸ்டார் தனுஷா? சிம்புவா? என்ற போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கும் சிம்புவிற்கு போட்டி இருந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அது சினிமாவிற்காக மட்டுமே தவிர தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.
இருவரும் சந்திக்கும் போது முன்சென்று பேசிக்கொள்ள மாட்டோம். இது பலருக்கு தீணியாக அமைந்தது. ஆனால், தற்போது இருவரும் பொது இடங்கலில் சந்திக்கும் போது பேசிக்கொள்வ்தால் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.