திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (13:03 IST)

விஜய்சேதுபதியுடன் பைக்கில் உலாவரும் ஸ்ருதிஹாசன்! வைரலாகும் புகைப்படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன்  நடிகை ஸ்ருதிஹாசன் பைக்கில்  ரவுண்ட் வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.


 
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில படங்கள்  மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் வித்யாசமான கதையம்சத்தில் அற்புதமான படைப்புகளாக கொடுத்தவர் இயக்குனர் ஜனநாதன். அந்தவகையில் அவரது இயக்கத்தில் வெளிவந்த  இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அத்தனை படங்களும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். 


 
இவர் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து "லாபம் " என்ற படத்தை இயக்கிவருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கலையரசன், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.     டி. இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 7சிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய்சேதுபதி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிப்பில் விஜய் சேதுபதியும், ஸ்ருதி ஹாசனும் பைக்கில் ஜாலியாக ரவுண்ட் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.