திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (10:04 IST)

பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான 'டகோயிட்' படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்!!

ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக  நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில்  படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை  ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட  செல்ஃபியைப் பகிர்ந்து, இனிமையான ஷீட்டிங் அனுபவம் எனக்குறிப்பிட்டுள்ளார். 
 
இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான்   ‘டகோயிட்’.  ஆத்வி சேஷின் 'க்ஷணம்' மற்றும் 'கூடாச்சாரி' உள்ளிட்ட பல தெலுங்கு பிளாக்பஸ்டர் படங்களுக்கு  ஒளிப்பதிவாளராக பணியாற்றிய, ஷனைல் தியோ இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆத்வி சேஷு மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை சுப்ரியா யர்லகட்டா தயாரிக்க, சுனில் நரங் இணை தயாரிப்பு செய்துள்ளார் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இப்படத்தினை வழங்குகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
 
இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு பெரும் பாராட்டுக்களைக் குவித்த  “மேஜர்” திரைப்படத்திற்கு பிறகு உருவாகும், ஆத்வி சேஷின் இரண்டாவது இந்திப் படம் இதுவாகும்.