1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified வெள்ளி, 17 மார்ச் 2023 (15:15 IST)

எல்லை மீறி ரசிகர்கள் கேட்ட கேள்வி! ஸ்ருதிஹாசன் சொன்ன ‘நச்’ பதில்!

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சலார் படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்ததாக அறிவித்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் “என்னிடம் முட்டாள்தனமான கேள்விகளைக் கேளுங்கள்” எனக் கேட்க, அதற்கு ஒரு சில ரசிகர்கள் பல எல்லை மீறிய கேள்வியைக் கேட்டனர். அதில் ஒரு ரசிகர்கள் “உங்களோடு டேட்டிங் செய்யலாமா” எனக் கேட்க , அவர் “முடியாது” எனப் பதிலளித்தார். இன்னொரு நபர் “நீங்கர் வெர்ஜினா (verjain) என தவறான் ஸ்பெல்லிங்கோடு கேள்வி கேட்க” அதற்கு ஸ்ருதிஹாசன் “முதலில் ஸ்பெல்லிங்கை சரியாக தெரிந்துகொள்ளுங்கள்” என நோஸ்கட் பதில் அளித்துள்ளார்.