வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 27 மே 2021 (20:49 IST)

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ஸ்ருதிஹாசன்?

கமல்ஹாசன் நடித்து தயாரிக்க இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் பகத் பாசில் நடிக்க உள்ளார் என்பதும் வேறொரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இந்த படத்தில் கமல்ஹாசன் மகள் ஆகவே நடிப்பார் என செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதிஹாசன் அப்பா நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க எனக்கு இதுவரை அழைத்து எடுக்கவில்லை என்றும் ஒருவேளை அழைப்பு விடுத்தால் என்னுடைய கேரக்டர் குறித்து பரிசீலனை செய்து அந்த கேரக்டர் எனக்கு பிடித்திருந்தால் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்,