செல்லக்கூடாத இடத்துக்கு சென்ற ஸ்ரேயா – லண்டன் போலிஸாரால் கைது !
தமிழ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற நடிகை ஸ்ரேயா அங்குள்ள போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுர படத்தின் இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி எனும் படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் விமல் மற்றும் ஸ்ரேயா நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டன் விமான நிலையம் அருகே நடைபெற்றது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் இருண்டஹ் ஸ்ரேயே திடீரெனக் காணாமல் போனார். இதையடுத்து படக்குழு அவரைத் தேட போலிஸார் அவரைத் துப்பாக்கி முனையில் கைதுசெய்து வைத்துள்ளனர்.
அதுபற்றி விசாரிக்கையில் ஸ்ரேயே அனுமதி மறுக்கப்பட்ட இடத்துக்குள் சென்றுவிட்டதாகவும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததாலும் அவரைக் கைது செய்துள்ளதாகப் போலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின் பாஸ்போர்ட் மற்றும் படப்பிடிப்பு அனுமதி சீட்டு ஆகியவற்றைக் காட்டி படக்குழு அவரை மீட்டுள்ளது.