'நாளை ’தலைவர் 169’ படத்தின் சூப்பர் அப்டேட்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 169 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியிட போவதாக அறிவித்துள்ளது
இதனை அடுத்து தலைவர் 169 படத்தின் அப்டேட் தான் நாளை வெளிவரும் என்றும் குறிப்பாக சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் நெல்சனுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.