1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (18:40 IST)

தமிழ் திரைப்படத்திற்கு டப்பிங் குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

aiswarya rajini
தமிழ் திரைப்படத்திற்கு டப்பிங் குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஒரு ஹிந்திப் படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் தமிழ் படம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்து உள்ளதாக கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், டப்பிங் செய்யும்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 
ஏற்கனவே வேறு தனுஷ் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த ரீமாசென் கேரக்டருக்கு ஐஸ்வர்யா பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது