1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (11:02 IST)

இனி கவர்ச்சிக்கு நோ... அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ்ட் போடும் ஷிவானி - நாலு மணி ரசிகர்கள் அப்செட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். இந்த கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருந்து வந்த ஷிவானி  தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு குறுகிய காலத்தில் நயன்தாரா ரேஞ்சிற்கு பிரபலமானார். 
 
அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறியதும் அம்மணி கவர்ச்சிக்கு பெரிய கேட் போட்டு இழுத்து மூடிவிட்டார். பிக்பாஸ் மூலம் கற்றுக்கொண்ட நல்ல விஷயமாக இனி அதை கடைபிடிக்க உள்ளாராம். 
 
அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் துளி கவர்ச்சி காட்டாமல் மாடர்ன் பெண்ணாக போஸ் கொடுத்துள்ளார். நல்ல விஷயம் தான் வாழ்த்துக்கள் ஷிவானி என நம்மில் பலர் பாராட்டினாலும் நாலு மணி ரசிகர்களால் மட்டும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.