வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (17:07 IST)

தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் இல்லை: சாந்தனு பாக்யராஜ் டிவிட்!

இன்று நடைபெற்ற சர்கார் கதை விவகாரம் தொடர்பான விசாரணையில் இயக்குனர் முருகதாஸ் கதை ராஜேந்திரனுடையதுதான் என ஒப்புக்கொண்டதோடு படத்தில் அவருக்கு அங்கீகாரமாக அவரது பெயர் கதையில் இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளார். 
 
இது குறித்து பாக்யராஜ், இந்த விஷயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது நான்தான். என் மகன் சாந்தனு தீவிர விஜய் ரசிகன். அவன் கூட என்மேல் இது சம்மந்தமாகக் கோபித்துக் கொண்டான் என்று பேசியிருந்தார். 
 
இந்நிலையில் சாந்தனு இதற்கு டிவிட் ஒன்று போட்டுள்ளார், அதில்  சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை.... என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்! கதையை என் அப்பா வெளியே கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம்... சர்கார் கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.