வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 16 மார்ச் 2020 (09:50 IST)

கனவு பலித்ததே.. ஹே.. ஹே.. இதய தளபதியே! – சாந்தனு ட்வீட்!

மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது நீண்ட நாள் கனவு பலித்து விட்டதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் சிறிய அளவில் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்னதாகவே வெளியான வாத்தி இஸ் கம்மிங் பாடல் இணையத்தில் வைரலானது. அந்த பாடலுக்கு நடிகர் சாந்தனு ஆடிய டான்ஸ் வீடியோ பெரும் வைரலாகி வந்தது. இந்நிலையில் நேற்று விழாவில் விஜய் மேடைக்கு வந்ததும் சாந்தனுவை அழைத்து மேடையிலேயே சாந்தனு ஆடிய ஸ்டைலிலேயே சாந்தனுவுடன் ஆடினார். இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல சாந்தனுவுக்கே பெரும் சர்ப்ரைஸாக இருந்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள சாந்தனு ”கனவு நிஜமாகியது.. எனக்கான வேண்டி கொள்வதாக சொன்னீர்கள். மேலும் என்னுடன் சேர்ந்து உங்கள் பாட்டுக்கு எனது டான்ஸை என்னோடு ஆடினீர்கள் . நன்றி விஜய் அண்ணா.. ” என்று கூறியுள்ளார்.