ரஜினிக்கு தங்கையாக ஷாலினி… கடைசியில் நடந்த மாற்றம்!
ரஜினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க நடிகை ஷாலினியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ராதாரவி மற்றும் நாசர் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. முத்து படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை இயக்கியிருந்தார் கே எஸ் ரவிக்குமார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்தன் முலம் ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகள் கிடைத்தன.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க மீனா அல்லது நக்மா ஆகியோரைதான் தேர்வு செய்திருந்தாராம் கே எஸ் ரவிக்குமார். அதே போல ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க அஜித்தின் மனைவி ஷாலினியைதான் தேர்வு செய்தாராம். ஆனால் அப்போது ஷாலினி பிஸியான நடிகையாக இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் சித்தாரா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.