ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (18:44 IST)

மைக்கேல் ஜாக்சனுடன் அஜித் & ஷாலினி – வைரலாகும் புகைப்படம்!

பாப் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சனுடன் அஜித் ஷாலினியோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜித் பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் கலந்துகொள்வதில்லை. ஆனால் அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பிக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் அஜித் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.