வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (14:12 IST)

பாஜகவின் அழுத்தமே ரஜினியின் ரத்த அழுத்தத்திற்கு காரணம்: கே.எஸ்.அழகிரி

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார் என்பதும் இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ரஜினியின் ரத்த அழுத்தத்திற்கு பாஜக கொடுத்து அழுத்தமே காரணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ரஜினிகாந்தை நாங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்தோம் என்றும் அவருக்கும் சம்மதம் தான் என்றும் ஆனால் பாஜகவினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகவும், பாஜகவே ரஜினியின் ரத்த அழுத்தத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளார் 

இருப்பினும் ரஜினி ரசிகர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கமல்ஹாசன் கட்சி தங்கள் கூட்டணிக்கு வந்தால் அதை வரவேற்க தயாராக இருக்கிறோம் என்றும் எங்கள் கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்