புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:22 IST)

மான்களுக்கும் மயில்களுக்கும் நடுவில் பேரழகியாக சமந்தா... சகுந்தலை First Look!!

நடிகை சமந்தா நடித்துள்ள வரலாற்று படமான சகுந்தலம் பாத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

 
தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சமந்தா நடித்துள்ள வரலாற்று படமான சகுந்தலம் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 
 
இந்த படத்தை ருத்ரமாதேவி, ஒக்கடு, சைனிகுடு ஆகிய படங்களை இயற்றிய குண்சேகரன் இயக்கியுள்ளார். இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.
 
விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலையும் துஷ்யந்தனும் காதலிக்கிறார்கள். பின்னர் துருவாச முனிவர் சாபத்தால் காதலை துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி துஷ்யந்தனுடன் சகுந்தலை எப்படி இணைகின்றனர் என்பது இப்படத்தின் கதையாக இருக்கும்.