1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Simbu paththu thala Firstlook poster released

சிம்புவின் ‘’பத்துதல’’ பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் !

#AJR
நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள  பத்து தல திரைப்படத்தின் 2வது லுக் போஸ்டர் ரிலீஸாகியுளது.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. கடந்தாண்டு அவரது ஈஸ்வரன் திரைப்படம் ம் மாநாடு திரைப்படம் படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.

இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டுடியோ கிரீன்  நிறுவனம் பத்துதல படத்தின் 2வது போஸ்டரை வெளியிட்டுள்ளது.  அதில், மீசை தாடி கெட்டப்பில் சிம்பு ஸ்டலாக நடந்து வருவதுபோல் உள்ளது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சிம்புவின் ‘’பத்துதல’’ படத்தின் ஜிலிம்ஸ் வீடியோ ரிலீஸ் !