அவங்க ரெண்டு பேர்கிட்டயும் நெறைய கத்துக்கலாம்… தமிழ் நடிகர்களை பாராட்டிய ஷாருக் கான்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பிரிவியு சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் டிவிட்டரில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு ரசிகர் “விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரோடு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?” எனக் கேட்க அதற்கு பதிலளித்த ஷாருக் “நயன்தாரா இனிமையும் அளவுக்கு அதிகமான மரியாதையும் கொண்டவர். விஜய் சேதுபதி மிக அற்புதமான நடிகர். இருவரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.