ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.
ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டு அவரின் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.. இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார்.
இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வந்த நிலையில் படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்ட சுஜாய் கோஷ் வெளியேறி அவருக்குப் பதிலாக பதான் படத்தின் சித்தார்த் ஆனந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.