திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (09:24 IST)

ஸ்ட்ரீ 2 இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா ஷாருக் கான்?

இயக்குனர் அமர் கௌஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படம் ‘ஸ்ட்ரி 2’. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது.  இந்த படம் திரையரங்ககள் மூலமாக மட்டும் 750 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாலிவுட்டை வியக்க வைத்துள்ளது.

பேன் இந்தியா நடிகர்கள் இல்லாமல் இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறக் காரணமே திரில்லர் ஜானரில் சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த படமும், இதன் முந்தைய பாகம் பெற்றிருந்த வெற்றியும்தான் என சொல்லப்படுகிறது. இதன்மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார் அமர் கௌஷிக்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அமர் கௌஷிக் இயக்கத்தில் ஷாருக் கான் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஷாருக் கான் அடுத்து கிங் மற்றும் பதான் 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். அந்த படங்களை முடித்த பின்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.