நயன்தாரா திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்… அட்லி பகிர்ந்த வைரல் புகைப்படம்!
நயன்தாரா திருமணம் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு செல்போன் அனுமதி கிடையாது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று திருமணத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் நிலையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கலந்து கொண்டுள்ளார். இதை அட்லி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது இணையத்தில் வைரலாகியுள்ளது.