1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (10:00 IST)

அடெஸ்ட்மென்ட் கொடுமை... சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகை - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

சினிமாவை பொறுத்தவரை வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும் என அது போன்ற சில மோசமான நபர்களை நடிகைகள் சந்திக்கிறார்கள். அது ஊரறிந்த உண்மை. சின்மயி முதற்கொண்டு இந்த கொடுமைகளை அனுபவித்தவர்கள் வெளியில் வந்து சொல்லியிருக்கிறார்கள். 
 
சிலர் வேறு வழி இல்லை என்பதற்காக அந்த சாக்கடையில் விழுந்தும் உள்ளனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக நடித்து குழந்தை நட்சத்திரமாக கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கல்யாணி. 
 
அதையடுத்து சீரியல் நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார். ஆனால், படவாய்ப்புக்காக இயக்குனர் ஒருவர் வெளிப்படையாக அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டதாக கூறி சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார். 
அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் பிறந்து இருக்கிறார்.இந்நிலையில் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகான போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.