பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வின்னரான செந்தில் கணேஷுக்கு சினிமாவிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே ஒரு படத்தில் ஹீரோவாக அவர் நடித்து வரும் நிலையில் திரைப்படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். அவருடைய புகழ் பெற்ற பாடலான 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் சமீபத்தில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தில் இடம்பெற்று நல்ல வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் அட்டக்கத்தி, மெட்ரஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இந்த படத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் ஒன்றை பாடலாசிரியர் உமாதேவி எழுத, இந்த பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. டென்மா என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.