ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (21:05 IST)

தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியில் இருந்து திடீரென விலகிய பார்த்திபன்!

தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் இன்று அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் இருந்து நடிகர் பார்த்திபன் ஒதுங்கி இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் நாளை அந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில் இன்று அவர் பதவி விலகியுள்ளது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில்தான் பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. 'இளையராஜா 75' நிகழ்ச்சி முடிந்த பின்னர் இதுகுறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.