ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: ஞாயிறு, 6 மே 2018 (08:56 IST)

“நாங்க தமிழச்சிங்க…” – செல்வராகவன் கவிதை

‘நாங்க தமிழச்சிங்க…’ என ஒரு கவிதை எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.


 
சூர்யா நடிப்பில் தற்போது ‘என்.ஜி.கே.’ படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், கவிதை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன். “தாய்மொழியை வெறித்தனமாய் நேசிக்கும் சகோதரிகளைப் பற்றி யோசித்தபோது தோன்றிய வரிகள்.
புல் பூண்டு பூ கூட தமிழ் பேசும்ங்க
எங்க கண்ணாடி முகம் இல்ல மொழி காட்டும்ங்க
மொறத்தால புலியடிச்சோம் கதையில்லைங்க
அது நெஜம்தானுங்க
நாங்க தமிழச்சிங்க!” என்று பதிவிட்டுள்ள செல்வராகவன், ‘பிடித்தால் சரி, பிழையெனில் மன்னிக்கவும்’ என்றும் அதில் தெரிவித்துள்ளார்.