செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:33 IST)

ஜி வி பிரகாஷுக்கும் பட்டம் கொடுத்த இயக்குனர்!

இயக்குனர் சீனு ராமசாமி ஜி வி பிரகாஷ் குமாரை வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் ஒரு மாதத்துக்குள்ளாக முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. வழக்கமாக தன் படங்களில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு ஏதாவது பட்டம் கொடுத்து டைட்டிலில் போடுவார் சீனு ராமசாமி.

தான் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை தர்மதுரை படத்தில் கொடுத்தார். இப்போது ஜி வி பிரகாஷ் குமாருக்கு வெற்றி தமிழன் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளாராம். எப்படியெல்லாம் ஐஸ் வைக்குறாரு பாருங்க.