திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (14:27 IST)

சீனு ராமசாமியால் சினிமாவை விட்டே சென்ற பிரபல நடிகை.. பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பத்திரிக்கையாளர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பீல்குட் படங்களாக எடுத்து வருபவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான மாமனிதன் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இப்போது சீனு ராமசாமி இடிமுழக்கம் மற்றும் கோழிப்பண்னை ராமசாமி ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் சீனு ராமசாமி பிரபல நடிகை மனிஷா யாதவ்வுக்கு படப்பிடிப்பு தளத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள பிஸ்மி ”சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான மனிஷா ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற போது அவருக்கு பல விதங்களில் சீனு ராமசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததால் ஒரு வாரம் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்த நிலையில் மனிஷா அந்த படத்தில் இருந்து வெளியேறினார். சென்னை வந்தபிறகு எனக்கு போன் போட்டு அவர் என்னவெல்லாம் தொந்தரவு கொடுத்தார் என்று பேசினார். அதற்கான எல்லா ஆதாரமும் என்னிடம் உள்ளது. சீனு ராமசாமியால்தான் அவர் சினிமாவை விட்டே வெளியேறினார்” என ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.