புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 24 ஜனவரி 2019 (20:30 IST)

அதை செய்து, இதை ஏன் செய்யவில்லை? அஜித்துக்கு சீமான் அட்வைஸ்!

பாஜக மாநில தலைவர் தமிழிசையின் பேட்டியின் காரணமாக, நடிகர் அஜித், எந்த காலத்திலும்தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை தெளிவான, விளக்கமான அறிக்கை மூலம் தெரிவித்துவிட்டார்.
 
மேலும், அதில் அரசியல் சார்ந்து எந்த கருத்தும் தன் படத்தில் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் அஜித் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழிசை சௌந்திரராஜன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்து இருந்தனர். 
 
இந்நிலையில் இயக்குனராக, நடிகராக இருந்து தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்ட சீமானும் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்துளளார். 
 
அதேபோல் தன் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்பதையும் அஜித் கூறியிருக்க வேண்டும், அஜித் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என சீமான் ஒரு அட்வைஸாக கூறியுள்ளார்.