1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (14:56 IST)

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?
விஜய் டி.வி-யின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு போட்டியாக, சன் டி.வி-யில் தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு ர்' நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் வரவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு முதல் சீசனில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, புதிய மாற்றங்களுடன் இது தொடங்குகிறது.
 
டாப் குக்கு டூப் குக்கு ' சீசன் 2-வை பாடகி ஷிவாங்கி மற்றும் நடிகர் விஜய் ராகேஷ் ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர். ஏற்கனவே 'நானும் ரவுடிதான்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷிவாங்கிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவருக்குப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 
விஜய் டி.வி. மூலம் பிரபலமான பரத், மோனிஷா, ஜி.பி.முத்து, அதிர்ச்சி அருண், தீனா, மீனாட்சி மற்றும் கமலேஷ் ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
முதல் சீசனில் வாரத்திற்கு ஒரு எபிசோடு ஒளிபரப்பான நிலையில், இரண்டாவது சீசனில் வாரத்திற்கு இரண்டு எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது.
 
Edited by Siva