ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (11:25 IST)

கடலில் கணவருடன் ரொமான்ஸ் ... டைட்டானிக் போஸ் கொடுத்து காதலில் மூழ்கிய சாயீஷா!

கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். மகளை இதுவரை வெளியுலகிற்கு காட்டவில்லை. 
 
திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கிய டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடித்திருந்தனர். 
பின்னர் ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை,திரைப்படம் மெகா ஹிட் அடித்து மார்க்கெட்டை உயர்த்தியது. இந்நிலையில் தற்போது மனைவி சயீஷாவுடன் கடலில் டைட்டானிக் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியிட்டு காதலில் மூழ்கியுள்ளார்.