1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2018 (12:06 IST)

சவரக்கத்தி - திரை விமர்சனம்!

சைக்கோத்தனமான ரவுடி, அவனிடம் தெரியாமல் மோதிவிடும் ஒரு சாதாரண மனிதன், கர்ப்பமாக உள்ள, காது கேட்காத அவனது மனைவி - இந்த மூவரின் ஒரு நாள் பயணம்தான் சவரக்கத்தி.
 
ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குனர் ராம் மற்றும் மிஷ்கின், நடிகை பூர்ணா ஆகியோர் நடித்துள்ள படம் சவரக்கத்தி. சிகையலங்கார கலைஞர் ராம். இவரது காது கேட்காத, நிறைமாத கர்ப்பிணி மனைவி பூர்ணா. மாலை சிறை திரும்ப வேண்டிய காரணத்தால் பெரும் கோபத்தில் இருக்கும் சைக்கோ ரவுடி மிஷ்கின்.
 
பூர்ணாவின் தம்பியின் திருமணத்திற்காக அவசரமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் ராம், போகும் வழியில் வில்லம் மிஷ்கினோடு மோத வேண்டிவருகிறது. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. சிறை திரும்புவதற்குள் மங்காவும் பிச்சையும் ஆடும் ஆடு-புலி ஆட்டமே சவரக்கத்தி.
 
ஒரு சவாலான கதையை எடுத்து, மூன்றே முக்கியக் கதாபாத்திரங்கள் கொண்டு இயக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர். இடைவேளை வரை படம் பறக்கிறது. இடைவேளைக்கு பிரகு சிறிது தொய்வு ஏற்பட்டு, இறுதிக் காட்சியில் மீண்டும் சூடுபிடிக்கிறது படம்.
 
மிஷ்கின் இயக்கும் படங்களுக்கே உரிய பிரச்சனை இந்தப் படத்திலும் இருக்கிறது. இதை விட்டுவிட்டால், அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படம் சவரக்கத்தி.