வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (15:18 IST)

சலீம் இயக்குனருடன் இணைந்த சசிகுமார்!

அம்மாவின் பாசம், மிடில் க்ளாஸ் குடும்பம், உறவுகள் , நட்பு என  கிராப்புற வாழ்வை மையப்படுத்தி சித்தரிக்கும் கதைகளில் கட்சிதமாக பொருந்துபவர் நடிகர் சசிகுமார். அதுபோன்ற படங்களில் அவரின் யதார்த்தமான நடிப்புக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். 
 
இவர் சமீபத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் உயிர் நண்பராக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த சலீம் படத்தின் இயக்குனர் என்.வி.நிர்மல்குமாரின் அடுத்த படத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் P.K.ராம் மோகன் தயாரிக்கிறார்.
 
அண்மையில் நிர்மல்குமார் அரவிந்த்சாமி- திரிஷாவை வைத்து "சதுரங்கவேட்டை 2" படத்தை இயக்கவிருந்தார் ஆனால் அப்படம் பைனாஸ் பிரச்சனையில் இருப்பதால் அதற்கு முன்னரே சசிகுமாரை வைத்து தனது புது படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில் நேற்று இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. இதனை தனது ட்விட்டரில் பதிவிட்ட  நிர்மல்குமார், ‘எனது அடுத்தப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிக்கவிருக்கின்றார்.ஆக்க்ஷன் கலந்த திரில்லர் படமாக அந்தப்படம் உருவாகவிருக்கின்றது என்று கூறியுள்ளார்.