திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (18:04 IST)

அடுத்தடுத்த வாரத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் சசிகுமார்!

sasikumar
பிரபல நடிகர் சசிகுமார் நடித்த காரி என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த காரி  திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி சசிகுமார் நடித்த ’நான் மிருகமாய் மாற’ என்ற படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே அடுத்தடுத்த வாரங்களில் சசிகுமாரின் இரண்டு படங்கள் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சசிக்குமார், பார்வதி, அம்மு அபிராபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்த ’காரி’ திரைப்படத்தை ஹேமந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு  டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran