1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (17:30 IST)

கார்த்தியின் ஜப்பான்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

japan
பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் வெற்றிக்கு பிறகு கார்த்தி தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. 
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது 
அட்டகாசமான கலர்ஃபுல் போஸ்டரான இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் 
 
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உள்ளார் என்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

japan first look