1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 31 அக்டோபர் 2018 (19:36 IST)

ரூ.200 கோடியை தொட்ட சர்க்கார்..! பதறிய விஜய் ஏன்...?

ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாளிக்கு சரவெடியாக வெடிக்கவுள்ளது. 
 
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து பிரசச்னைகளை சந்தித்து வந்த சர்கார் ஒரு வழியாக அதில் இருந்து மீண்டு வியாபாரத்தில் உச்சத்தை தொட்டுள்ளது.
 
சர்கார் படத்தின் வியாபாரம் ரூ.200 கோடியை தொட்டு உச்சத்தை எட்டிவிட்டது. இந்த வியாபாரம் உச்சத்தை தொட்டதற்கு விஜயின் மார்க்கெட் வேல்யூ மட்டுமே காரணமல்ல. சன் பிக்சர்ஸின் சாதனையும் இதில் அடங்கியுள்ளது.
 
இது தளபதி விஜய்க்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஒரு புறம் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார். ஏனென்றால், இவ்வளவு கொடிகளை கொட்டி நம்பிக்கையோடு படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் படம் ஓடாவிட்டால், விற்றவர்களை விட்டுவிட்டு விஜய்யிடம்  வந்து நிற்பார்கள்.
 
அப்படியொரு சங்கடம் தனக்கும் நேரக்கூடும் என்ற பயத்தில் உள்ளாராம் விஜய். இவரின் இந்த  சந்தேகத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. திருட்டு கதை விவகாரத்தில் சிக்கிய சர்கார்,மக்களிடியே எதிர்மறையான கருத்துக்களை பெற்றது. மேலும் படத்தின் கதையும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. 
 
இந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்திருக்குமோ என்கிற அச்சமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோடி கணக்கில் பணத்தை கொட்டிய விநியோகிஸ்தர்களை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சத்தில் உள்ளார் விஜய்.
 
தளபதி விஜய் இதற்கு முன்பும் தலைவா படத்தில் இதுபோன்ற பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.