செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (22:31 IST)

'சர்கார்' கதை திருட்டு விவகாரம்: ரஜினி-முருகதாஸ் படம் டிராப்?

சூர்யா நடித்த 'கஜினி' படத்தில் இருந்தே ஏ.ஆர்.முருகதாஸ் என்றால் காப்பி இயக்குனர் என்றே நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் 'சர்கார்' திரைப்படம் அவர் சேர்த்து வைத்திருந்த மொத்த நல்ல பெயரையும் டேமேஜ் ஆக்கிவிட்டது. மீண்டும் அவருக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தை அடுத்து ரஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கோலிவுட்டில் ஒரு கிசுகிசு கிளம்பியுள்ளது.

மேலும் இனி எந்த பெரிய நடிகரும் முருகதாஸ் உடன் பணிபுரிய தயங்குவார்கள் என்றே கூறப்படுகிறது. யாரும் தனக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் தான் யார் என்பதை புதுமுகங்களை வைத்து நிரூபிக்கவுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.