வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 அக்டோபர் 2018 (22:50 IST)

ஆயுத பூஜை தினத்தன்று மீண்டும் 'சர்கார்' கொண்டாட்டம்

கடந்த சில நாட்களாக விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாடத்தின் உச்சமாக கடந்த 2ஆம் தேதி இந்த படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. அரசியல் சாயங்களுடன் நடந்த இந்த விழா பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இன்றும் விவாத பொருளாக உள்ளது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தின் அடுத்த கொண்டாட்டமாக இந்த படத்தின் டீசர்  வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என செய்தி வெளிவந்துள்ளதால் அந்த தினத்தில் மீண்டும் ஒரு சர்கார் கொண்டாட்டம் இருக்கும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே 'சர்கார்' ஆடியோ விழாவில் இந்த படத்தின் டீசர் தயாராகி வருவதாகாவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.